பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 30, 2012

சித்திரை எட்டாம் நாள் :: அங்கயற்க்கன்னிக்கு பட்டாபிஷேகம்!


அகிலத்துக்கும் பொதுமறை..
திருக்குறள்..
அதில்
வள்ளுவன் வகுத்த
அகராதி..
இறைமாட்சி!

கல்வி..
தூங்காமை..
துணிவுடைமை..
அவை..
மக்களை ஆளும்
மன்னனின் சிறப்பு!
இறைமாட்சியில் உண்டு..
இவை குறிப்பு!

கூப்பிட்ட குரலுக்கு
ஓடோடி வரும்
வேட்பாளன் அல்ல அவள்!
ஆனாலும்..
இமை மூடாமல்..
மக்கள் காக்க..
நல்லாட்சி புரிவாள்..
அன்னை மீனாட்சி!

விழிகளை இமைக்காமல்
மீன் அடைகாத்து...
குஞ்சினை பொறிக்கும்!
பார்வையில் அருள்பாலித்து..
மீனாட்சி குறைதீர்ப்பாள்..
உயிர் நல்வழி காப்பாள்!

மீன் போன்ற
கண் கொண்டவள்
அங்கயர்க்கண்ணி..
மீனாட்சி!
அவள் ஆளும்
தூங்காநகரம்..
மதுரை அரசாட்சி!

மலையத்துவச
பாண்டிய மன்னனின்
மகள் மீனாட்சி!
ஆணுக்கு பெண்
சளைத்தவளும் அல்ல..
இளைத்தவளும் அல்ல..
என்பதற்கு
அவளே சாட்சி!

மனதிலே திராணி..
திருவிழா நகரத்து..
ராணி..
வீரத்தின் அடையாளமாக..
இடையிலே கொண்டிருந்தால்
குறுவாள்!

புராணகாலத்தில்..
மன்னன்
மீனாட்சிக்கு..
பட்டாபிஷேகம்
சூட்டி..
கோலாகலமாய்..
கொண்டாடியதை..
இன்றும்..
நினைவு கூர்ந்து..
பக்தர் உள்ளத்தில்..
மகிழ்ச்சி வெள்ளம் புரள..
நான்மாசி வீதிகளில்..
அருள்பாலித்தாள்..
அங்கயர்க்கண்ணி
மீனாட்சி!


No comments:

Post a Comment