பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 29, 2012

சித்திரை ஆறாம் நாள் :: ரிஷப வாகன தரிசனம்!

நாயன்மார்கள்
அறுபத்துமூவர்..
அதில் ஒருவர்
திருஞான சம்பந்தர்!

தந்தை
சிவபாத இருதயர்
அன்றும் வழக்கம்போல்..
தோணியப்பர் கோவில்
குளத்தில்..
மூன்று வயது பாலகன்
சம்பந்தரை..
கரை அமர்த்தி..
நீராடினார்!

பசி தாளாமல்..
வயிறு கிள்ள..
அம்மா என்றழ..
சிவபிரான் நொடியும்
தாமதிக்காமல்..
தன்னோடு..
அகிலத்து அன்னை
பார்வதியோடும்..
பிரவேசித்தார்!

அந்த அம்பிகை
வந்தாள்..
கரங்களில் வாரி..
பாலகன் பசி
தீர்க்க..
பொற்கிண்ணத்தில்..
ஞானப்பால் ஊட்டி
மகிழ்ந்தாள்..
பின்னர் மறைந்தாள்!

குரோதம் வந்துவிட்டால்
மனிதன் வேறல்ல..
மிருகம் வேறல்ல!

கரையேறி வந்தார்..
இருதயர்!
பால் வழிந்த
இதழ் கண்டார்..
மழலை முகத்தோன்
மீது..
கோபம் கொண்டார்!

பிரம்பெடுத்து
மிரட்டினார்..
கேள்விக்கணைகளை
தொடுத்தார்!!

பால் மனம் மாறாத
பூமுகனிடம்..
பசியாற்றியது யாரோ
என்று கேட்க..
குழந்தை
ஞானத்தமிழால்..
'தோடுடைய செவியன்...' என
முதல் தேவாரப்பாடல்
பாடினான்!!

பாடலில் தமிழ்ச்சுவை..
தேவாமிர்தத்தை
மிஞ்சியது!
அம்மை அப்பன் செவியில்..
தெவிட்டாத தேனாய்..
தேவாரம் பாய்ந்தது!

அக்கணமே
தந்தைக்கும்
தனயனுக்கும்..
அருள்பாளித்தனர்..
அம்மையும் அப்பனும்..
ரிஷப வாகனத்தில்!

சிவபெருமானின்
வாகன தரிசனங்கள்
மிகச்சிறப்பு!
அதில்
ரிஷப வாகன
தரிசனம்..
தனிச்சிறப்பு!

ஐதீகம்
ஒன்றுள்ளது..
கேளுங்கள்..
தர்ம தேவதை
தாங்குவாள்
இறைவனை..
ரிஷப வாகனத்தில்!

புண்ணியம் தேடி
காசிக்கு வேண்டாம்..
ரிஷப வாகன
தரிசனமே..
கோடான கோடி
புண்ணியம் என்றுணர..
கடம்பவன நகரில்..
மக்கள்
செல்வசெழிப்புடன் வாழ..
ஆறாம் நாளில்
பவனி வருவர்..
அம்மையும் அப்பனும்!!

No comments:

Post a Comment