பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 27, 2012

சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் பாடம் :: மனக்குதிரையை அடக்கு!


தர்ம வழியில்..
மனித மனம்..
தினம் சிந்தித்தால்..
பொன் பொருள்
நல்வழியில் தேடி..
செல்வந்தனாய்
உயர்வான்!

நல்வழியில்..
ஒழுக்கமாக
வாழ்ந்தால்..
இன்பங்கள் பல
பெற்று...
ஈசன் திருவடி
அடைவது..
மானுட பிறவிக்கான
பலன்!

அது
அறம் விரும்பி
செய்து...
பொருள் பல
சேர்த்து...
தானும்
இன்புற்று..
பிறரும்
இன்புற்று..
வாழ்பவனே..
இறைவன் பாதம்..
சேர்வான்!

ஒரு கால்
அறம்..
மறு கால்
பொருள்..
பின்னொரு கால்
இன்பம்..
மற்றொரு கால்
வீடுபேறேன்று..
குதிரையின் கால்களாய்
விளங்கும்!

திறன் வாய்ந்த
வீரன்...
குறி பார்த்து
செலுத்தி..
இலக்கை அடைவான்!

சகலமும் அறிந்த
இறைவன்..
மனிதன்
சரியான வழி
செல்ல..
மனக்குதிரையை
அடக்குவான்!

குதிரை வீரனாக
வந்த சுந்தரேஸ்வரர்..
நரியை பரி மாற்றி
பரியை நரி மாற்றி..
திருவிளையாடினார்!

பக்தி வெள்ளத்தில்..
மிதக்கும் மக்கள்
உள்ளத்தில்..
மகராஜனும்
மகராணியுமாய்..
மதுரை வீதிகளில்..
உலா வந்தனர்...
சுந்தரேஸ்வரரும்..
அன்பு மீனாட்சியும்!!

No comments:

Post a Comment