குணங்களின் கலவை..
மனிதன்!
அவைகளில்..
உயர்வுண்டு..
மூர்க்கமுண்டு..
மந்தமுண்டு!
மண் மீது ஆசை..
பெண் மீது ஆசை..
பொன் மீதும் ஆசை!
ஆண்டவன் தருவான்
பூசை!
கற்காலம் முதல்..
கலிகாலம் வரை..
சிலந்தி வலையில்
சிக்குவதைப்போல்..
ஆசையில் சிக்கி..
அழியாத
மனிதன் இல்லை!
தெய்வ அருள்
மிகுந்திருந்தால்..
மனதில்
ஆணவம் இருக்காது!
மனிதனில் ஆணவம்
புகுந்திருந்தால்..
தெய்வ அருள் கிட்டாது!
அப்படியொரு
அவதாரம்
ஆணவத்தின்
அடையாளம்..
இராவணன்!
இருக்குமிடம்
சிவனென்று அறிந்தும்..
ஆணவம்
தலை அரியாசனத்தில்..
தாண்டவம் ஆடியது!
ஆணவ பெருக்கு
சிவபிரானின்
கயிலை மலையே..
பெயர்த்தெடுக்க
வழி மொழிந்தது..
ராவணனுக்கு!
சிவனும் பாடம்
புகட்டினார்...
ராவணன்
குடிவைத்த ஆணவத்திற்கு!
பாதம் பதித்து..
கட்டை விரல்
அழுத்தி...
மலையிலிருந்து..
கீழ் தள்ளினார்
ஈசன்!
ரணவலியில்
ராவணனும்
வீழ்ந்தான்..
அவன்
ஆணவமும்
வீழ்ந்தது!
வேண்டினான் இறைவனிடம்..
தன்னை
மன்னித்தருள!
விடுவித்தார் சிவனும்..
அந்த ஆணவமற்ற
ராவணனை!
இன்றும் மண்ணில்...
மதி கெட்டு
திரிகிறான்..
மனிதன்..
இறைவனை
மதியாமல்..
ஆணவம்
தலைக்கேறி!
அந்த
மதிகெட்ட
மானிடனின்..
ஆசை மயக்கம்
தெளிந்து..
ஆணவம் திமிர்..
நல்வாழ்வு காணவே..
சுந்தரேஸ்வரர்
இன்று பவனி வந்தார்
கைலாச பர்வத
வாகனத்தில்!
கேட்கும்
வரமெல்லாம்..
குறையின்றி
கொடுக்கும்
பசு..
தேவலோக பசு..
தெய்வ பசு..
அது-
காமதேனு!
பிறந்த உயிர்களுக்கு..
உயிராய்..
உறுதியாய்..
தன் ரத்தத்தையே..
பரிசுத்தமான
பாலாக தரும்..
பசு!
மண்ணில் வாழும்..
இல்லாதவருக்கும்..
இயலாதவருக்கும்..
இருப்பவரும்..
இயன்றவரும்..
தன்னாலம் துறந்து..
வேண்டும் வரம்
தருபவளாக..
காமதேனு வாகனத்தில்...
நான்மாடக்கூடல் நகரில்..
இன்று
அருள்பாலித்தாள்..
அம்மன் மீனாட்சி!!



No comments:
Post a Comment