பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 29, 2012

சித்திரை ஏழாம் நாள் :: நந்தியின் சித்தரிப்பு!


கலியுகத்தில்..
வாழும் மானிடற்கு..
நந்தியின் சித்தரிப்பு..
ஒரு
முகம் சுளிப்பு!

கதை சொல்லபோகிறேன்
இன்று..
கவிதை எழுதி
வைக்கிறேன்..
நந்திக்கு!

யுகங்களுக்கு முன்..
சிலாத முனிவர்..
வாழ்ந்த ஊர்..
ஸ்ரீசைலம்!

மனிதருக்கும் சரி..
முனிவருக்கும் சரி...
சில பல..
நிறை குறை உண்டு!

முனிவருக்கும்
குறை இருந்ததாம்..
நெடுங்காலமாய்!
அது..
புத்திரபாக்கிய குறை!

சிவபெருமானிடம் வேண்டி..
யாகம் செய்ய எண்ணி..
தன்னிலம் உழ..
மண்ணிலத்திலே
நிகழ்ந்தது..
ஒரு அதிசயம்!

பொற்ப்பேழையில்
கிடைத்தது..
அழகிய ஆண்
நவரசம்!

விண்ணளவு
விசாலத்திற்கு..
மகிழ்வுணர்ந்த
சிலாத மாமுனிவர்..
சிவபிரானை எண்ணி..
அவர் நாமங்களில்..
ஒன்றை பெயரிட்டார்!
அந்த தெய்வபுதல்வனுக்கு...
நந்தி என்று
பெயர் வைத்தார்!

கலைகள் சகலத்திலும்..
வித்தகரானவர்க்கு..
விதி விதிக்கபட்டிருந்தது..
அது அற்ப ஆயுளென்று!

தந்தை சிலாதரின்
வருத்தம் தீர்க்க..
தனயன் நந்தி..
தவம் புரிந்தான்..
மூன்று முறை..
சிவபிரானை வேண்டி!

முதல் தவத்தின் பயன்..
மாறாத சிவ பக்தி!
இரண்டாமுறையின் போது..
சிவநிந்தை புரிபவர்க்கு
தண்டிப்பு!
இறுதியில்..
அழியாவரம் கொண்ட..
சிவபெருமானின் அம்சம்!!

நந்தியோடு..
ஈஸ்வரர் பட்டமும்..
பற்றிக்கொண்டது!
நந்திகேஸ்வரர் ஆனார்
நந்தி!

மணம் முடித்தார்..
சுயம்பிரபையை!
கைலாயம் சென்று
சிவபிரான் கணங்கள்
பல கண்டு..
தலைவரும் ஆனார்!

தெய்வங்களில்
நந்தி ஒரு
மாறுபட்ட பிறப்பு!
அவர்க்கு உண்டு..
மற்றும் பல சிறப்பு!

சிவந்த நிறம்..
இருகண்களோடு..
நெற்றிக்கண்!
ஜடாமுடியும்..
வலக்கை மழுவும்..
இடக்கை மானும்..
மேலும் அவர் சிறப்பு!

தெய்வ வாகனங்களில்..
திறனானது..
யாளி வாகனம்!
அது..
யானையும்
சிங்கமும்..
கலந்த வாகனம்!

மனிதனுக்கு
பிடித்த மதம்..
யானைக்கும் பிடித்தாலும்..
சிங்கத்தினுள்
குடிகொண்டிருக்கும்
தற்பெருமையும்..
கோபமும்..
மனிதன் மனதிற்குள்...
தங்கியிருந்தாலும்..
மீனாட்சி அன்னையின்..
அருள்சக்தியில்..
அடங்கிபோகும்!

கீழான
குணங்களில் இருந்து
மனிதன் மீண்டு..
நற்கதி பெறலாம்!
நினைத்த செயல்கள்...
யாவற்றையும்..
செம்மையாக..
நிகழ்த்தி..
முற்பிறவி பாவங்கள்..
கழுவலாம்..
ஏழாம்நாள்..
நந்திகேஸ்வர வாகனத்தில்
அப்பரையும்..
யாளி வாகனத்தில்..
அம்மனையும்..
தரிசனம் செய்தால்!


No comments:

Post a Comment