பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 24, 2012

அன்ன வாகனத்தில் பவனி வந்த அன்னை மீனாட்சி!


பிறர் தர வாராது..
தீதும் நன்றும்!
மானுடன் இழைக்கும்...
ஒவ்வொரு
வினையின் விளைவே..
தீதும் நன்றும்!

தரணியில்
பிறந்த உயிர்
ஒவ்வொன்றுக்கும் உண்டு...
இன்மை..
நன்மை..
அது காலத்தின் தன்மை!

நீர்..
நிலம்..
காற்று..
ஆகாயம்..
நெருப்பு..
இயற்கையால் உருவான...
பஞ்சபூதங்கள்!

இன்பம்..
துன்பம்..
மனிதன் செயற்கையாய்
வகுத்துக்கொண்ட பூதங்கள்!

சண்டையிடும்
இயற்கை பூதங்களுக்கு..
அச்சுறும்
செயற்கை பூதங்களுக்கு..
மனித மனம்!!

அச்சுறுத்தும்
பூதங்கள் அழித்து...
முக்தியளிக்க..
எழுந்தருள்ந்தார்...
சுந்தரேஸ்வரர் இன்று..
பூத வாகனத்தில்!

மனித மனங்களிலும்..
தன் வர்ணம் போல்...
வெண்மை வேண்டும்
என்பது..
அன்னம் எண்ணும்..
பாடம்!

பாலினில்
நஞ்சு கலந்தாலும்..
பால் மட்டும்
பிரித்து பருகும்..
வெண்ணிற அன்னம்!

நன்மையில் தீமை
கலந்திருந்தாலும்...
நன்மை மட்டும்..
நன்மக்கள் மனம் புக...
அசைந்தாடி
மாசிவீதிகளில்..
தரிசனம் தந்தாள்
இன்று..
அன்ன வாகனத்தில்..
பவனி வந்த..
அன்னை மீனாட்சி!!!

No comments:

Post a Comment