பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 24, 2012

சித்திரை திருவிழா - முதல் நாள் பவனி!


உயிரினை படைப்பான்..
அவனே
அவ்வுயிரினை காப்பான்..
அசுரர் அழிப்பான்..
திருவிளையாடலில்
மறைவான்..
நல்லுள்ளதுக்கு மட்டுமே
அருள்வான்..
இறைவன்!

குரோதம்..
அகம்பாவம்...
ஆசை..
பெருமை..
எல்லாம் அசுரர் குணம்!
அவை
மனங்களுக்கும் உண்டு!
அந்த அசுரர்..
மனிதனுக்குள் உண்டு!

மனம்
நல்வழிப்பட
அருள் வேண்டும்..
இறைவருள் வேண்டும்!

நல்ல மனங்கள்
கேட்டால்..
கேட்க கேட்க
நல்ல குணங்கள்
வரம் கொடுக்கும்..
கற்பக விருட்சம்!
அது-
சுவாமி சுந்தரேஸ்வரர்
அருள்பாலிக்கும்..
விருட்சம்!

கேட்டவைக்கு மேல்
கிடைத்தால்...
நர்த்தனம் ஆடிடும்..
ஆணவம்..
மனதில்..
மனிதனில்!

அந்த
மதி ஆணவம்..
அழிக்கவே..
சித்திரை மாத
திருவிழா
முதல் நாளில்..

சிம்ம வாகனம் பூட்டி..
அருள் பாலித்தாள்..
அன்னை மீனாட்சி!!!

No comments:

Post a Comment