எதிர்காலம்
தெரிந்தால்..
நிகழ்காலம்
நிலையின்றி நகரும்!
இன்பம் மட்டுமே
எதிர்காலம்
என்றறிந்தால்..
துன்பம் தாங்காது
மனித மனம்!
துன்பம் மட்டுமே
எதிர்காலம்
என்றறிந்தால்..
இன்பம் காணாது
கவலை மனம்!
மனிதனின் எதிர்காலம்..
மறைப்பது..
இறைவனின் லீலை!
மறைவை குறிக்கும்
வாகனமே
தங்கபல்லக்கு..
அதை..
மனிதன் உணர்வதே
நாசூக்கு!
பல்லக்கின் மேல்
படர்ந்திருக்கும்..
திரைச்சீலை..
காற்றில் மிதந்து..
கதை சொல்லும்..
குஞ்சலங்களும்..
ஈசனை மறைக்கும்!
மனிதனின் பிறப்பு..
முற்பிறவியில் விதைத்த..
நல்வினை..
தீவினையின் விளைவு!
அவன் உறுதியிட்டு
கூற இயலாது
அவன் எதிர்காலம்
என்னவென்று!
மறைக்கும் திரையும்..
அசையும் குஞ்சமும்..
உணர்த்தும்..
எதிர்காலம் அறிந்தவன்
இறைவனவன் ஒருவனே!
நடப்பவை எல்லாம்
இன்மைக்கே..
எதிர் காணப்போகும்..
நன்மையும் தீமையும்..
செய்த கடமைக்கு
பலன் பாராதே
என்ற உண்மை உணர்த்த..
சுந்தரேஸ்வரரும்..
மீனாட்சியம்மையும்..
தங்கப்பல்லக்கில்
எழுந்தருள்வர்!


No comments:
Post a Comment