பாண்டிய நாட்டின்..
மகாராணி..
அன்னை மீனாட்சி!
அவளுக்கு
ஈன்றோர் சூட்டிய
பெயர்..
தடாதகை!
பட்டம் சூடப்பெற்ற..
அங்கயர்க்கன்னி..
எட்டு திக்கும்..
எடுத்தாள்
நாற்படைகள்..
அவை-
தேர்
யானை
குதிரை மற்றும்
காலாட்படைகள்!
இடி முழக்கங்களுக்கு
இணையாக..
வாத்தியங்கள் முழங்க...
தேரில் ஏறினாள்..
வீரத்திருமகள்
மீனாட்சி!
அவள் அறிவுமதி..
ஆனாலும்..
உடன் சென்றாள்..
அமைச்சர் சுமதி!
மண்ணுலகம் வென்றாள்..
பின்னர்
விண்ணுலகம் சென்றாள்!
இந்திரன்
அக்னி
எமன்
நிருதி
வருணன்
வாயு
குபேரன்
ஈசானன்
எட்டுதிக்கையும்
ஆட்சிபுரியும்
அஷ்டதிக்பாலகர்!
யாவரிடமும்..
எதையும்..
விட்டுவைக்காமல்..
வெற்றி வாகை சூடினாள்!
தீரவில்லை...
வீரமங்கையின்..
வேட்கை!
திடமாய்...
தொடர்ந்தாள்..
மேலும் வேட்டை!
விளைவு..
சிவபிரானின்
கயிலாயமும்
பட்டது..
அந்த மங்கைக்கனி...
கண்களில்!
கிளம்பினாள்
வீரராணி..
கயிலாயம்
கைப்பற்ற!
சிவகணங்கள்
எதிர்த்தன..
சிதறடிக்கப்பட்டன!
பகவான் நந்தியும்
தடுத்தார்...
பதம்பார்க்கப்பட்டார்!
ஒற்றைக்கழல் அணிந்த
திருப்பாதங்களோடும்..
மேனியில் அமர்ந்திருந்த..
நாகத்தோடும்..
கரங்கள் ஏந்திய..
மழுவோடும்..
வெந்நீரும்..
கற்றை செஞ்சடையும்..
அக்னி சுடர் வீசும்..
நெற்றிக்கண்ணோடும்
சிவபெருமானே..
நேரில் வந்தார்!
அழகு மீனாட்சி..
அப்பரை..
எதிர்கொள்ளாமல்..
நாணித்து நின்றாள்!
அந்த வேளையில்..
தடாதகையின்..
மூன்றாம் தனம்..
மறைந்தது..
நாணம் பிறந்தது!
இறைவன் சிவபிரானே
கண் முன்
நிற்கிறார்...
அவரே மங்கை
என்று விண் முழுதும்..
அசரீரி ஒலிக்க..
பெருமாளும்..
மாநகர் மதுரைக்கு
வந்து..
மல்லி உன்னை
மனம் முடித்து..
அருள்பாளிப்போம் என்று
வாக்களித்தார்!
விண்ணையும்
மண்ணையும் மட்டுமின்றி..
ஈசனையும்..
தன் மனதால்..
வென்றவள்..
வீரத்திருமகள்
மீனாட்சி!!!



No comments:
Post a Comment