திக்விஜயம் கண்டு..
அகிலம் வென்று..
இறைவன் மனதையும்
கவர்ந்த..
பைங்கிளி மீனாட்சிக்கு..
சுந்தரேஸ்வரருடன்..
நிச்சயமானது..
திருமணம்!
தெய்வீக தம்பதியர்
மணத்திற்கு...
மேலோகம்..
பூலோகம் என..
அனைத்து லோகங்களையும்..
மணவோலை
வரவேற்தது!!
திருமணம் காண..
விண்ணுலகமே
மண்ணுலகிற்கு..
தரை இறங்கியது!
கோவில்மாநகர்
மதுரைக்கு முன்கூட்டி..
பிரவேசித்தனர்..
திருமாலும்
பிரம்மாவும்..
புது மாப்பிள்ளையை..
வரவேற்க!
பூரண பொற்கலசங்களை..
கரங்களில் ஏந்தி..
மங்கள தீபங்களோடு..
அணிவரிசித்தனர்..
சுமங்கலி மங்கையர்!!!
மலையத்துவஜ பாண்டிய
மன்னனும்..
மகாராணி காஞ்சனமாலையும்..
மருமகக்கடவுளுக்கு..
பன்னீர் தெளித்து..
சந்தனம் பூசி..
தங்கள் வீரத்திருமகளை..
மணம் முடித்து..
பாண்டிய நாட்டை அரசாள..
வேண்டினர்!!
நாரதர்
அகத்தியர்
முனிகள்
பக்திக்கடலில்
மூழ்கியிருக்க..
முன்னின்று..
யாகவேள்வி புரிந்தார்..
குருபிரம்மா!
அலங்கரிக்கப்பட்டு...
மணவறைக்கு வந்தாள்..
கவிதை கலைமகள்..
அழகு அலைமகள்..
மன்னனின் மலைமகள்..
மதுரை மீனாட்சி!!
இடி முழக்கங்களுக்கு
இணையாய்..
சகல திசைகளிலிருந்து..
உள்ளங்கள்..
கோடான கோடி..
வாழ்த்து மலர் தூவ..
மாங்கல்யம் தந்துநாமம்
ஒலிக்க..
நங்கைக்கு தாலி
கட்டினார்!!
அன்றிரவே..
திருமண கோலத்தில்..
சுந்தரேஸ்வரரும்..
பூப்பல்லக்கில்..
மீனாட்சியும்..
நான்மாசி வீதிகளில்..
உலா வருவர்!!!



No comments:
Post a Comment