பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

May 3, 2012

சித்திரை திருவிழா பதினோராம் நாள் :: அங்கயற்கண்ணி பவனி வரும் அழகு தேர்!!


ஊர் கூடித்தேர்
இழுப்பது...
நம் மண்ணில்..
தொன்றுதொட்டு..
நிகழும்..
வழக்கமனாது!

மனிதர் யாவரும்..
சமம்..
ஒற்றுமையோடு..
அனைவரும்
இழுத்தால்தான்..
தேர் சிறப்பாக..
பவனி வரும்!

அங்கயற்கண்ணி
அசைந்தாடி வரும்
தேரும்..
அப்படியே!!
மதுரை மண்ணின்..
மைந்தர் அனைவரும்..
ஒற்றுமை ஓங்க..
சொக்கரின் துதி
பாடி..
நீள வடம் பிடித்து...
பக்தியுடன்..
தேரிழுப்பது..
பண்பாட்டின் கலைகளின்..
அடையாளம்!

அரியநாத முதலியார்
வடிவமைத்த..
பதினாறாம் நூற்றாண்டு
தேர்மண்டபம்!
இன்றோ-
நாம் தரிசித்து..
பூசிப்பது..
ராணி மங்கம்மாள்
வம்சாவழி பேரனான..
விஜயரெங்க
சொக்கநாத நாயக்கர்..
வடிவித்த..
பதினெட்டாம் நூற்றாண்டு..
தேர்மண்டபம்!

சிவபுராணங்கள்..
திருவிளையாடல்
சிற்பங்கள்..
இரு தேர்களிலும்..
அடக்கம்..
அழகுற!

நாட்டை ஆளும்
அரசன்..
தன் நகரை..
வலம் வருவதுபோல்..
தரணியை ஆளும்..
அழகு சுந்தரரும்..
அன்னை மீனாட்சியும்..
தேரில் அசைந்தாடி..
உலா வருகின்றனர்!!

No comments:

Post a Comment