பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Aug 15, 2012

சுதந்திரம் அது நிரந்தரம்!!

பரங்கியன் வந்தான்..
பணிந்து..
பின்னர்..
பாரமாய் 
தாய்மண்ணில்
நின்றான்!

வளைந்து 
கொடுத்தவனுக்கு
அடிமைக்கனி
கொடுத்தான்..
வெளியே செல் என்று
சொன்னவனுக்கு..
செவி சாய்க்க மறுத்து..
மரணக்குழி
விதைத்தான்!!!

பூவாய் புன்னகைத்த..
புனிதர்கள்..
புலியாய்..
பிறகு புயலாய்..
போராளியாய்
மாறினார்!
அகிம்சை
காத்தனர்..
காந்தியவாதிகள்!
போரிட்டு..
தங்கள் உயிர்
அணைத்தனர்..
இம்சாவாதிகள்!!

மண்ணின்
மைந்தரின்..
போர்வாள்கள் பேசின..
பெண்டிர் சினம்...
பல
தலைகள் சாய்த்தன..
பிஞ்சுகளுக்கு
போர்களங்கள்..
விளையாட்டுத்திடல்கள் ஆயின!!!


இடிபட்ட
இல்லங்கள்..
அடிபட்ட
உள்ளங்கள்..
வரலாற்று
சுவடுகளில்..
வெளிவராத..
தலைகளின் வீரம்..
இன்றும்-
எங்கள் நெஞ்சில்!

மண்ணில் உதிர்ந்த
குருதியின் சாயம்...
நாம் சுவாசிக்கும்
சுதந்திரம்
என்னும் மாயம்!!!

அடைந்ததில்
பெருமிதம்
கொள்வதில்லை..
சுதந்திரம்!!
போராளிகள்
வீரமெண்ணி..
தியாகமெண்ணி..
கண்ணியமாய்
வழிநடந்து..
உடன் வாழ்வானை..
அடிமை கொள்ளாமல்..
மனம் காயப்படாமல்
காத்து வாழ்வதே..
முழு சுதந்திரம்..
என்றும்
அதுவே நிரந்தரம்!!!

No comments:

Post a Comment