பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Sep 4, 2012

ஒரு சமூகத்தின் குரல்..


ஆசிரியன்..
கல்வியறையின் ஒவ்வொரு..
மாணவ மணியின்..
இரண்டாம் தாய்!

ஆசிரியன்..
பல சந்தேகங்களுக்கு..
இறைவன் வகுத்த..
தூதுவன்!

ஆசிரியன்..
சாதி மத பேதங்கள் இல்லையடி..
என்று பாரதி சொல்வழி..
வாழ்பவன்!

ஆசிரியன்..
உயிருடன் மெய்யும் சேரும்..
எழுத்துக்களின் முகவரி!

ஆசிரியன்..
பல நூலகங்களின்..
உள்ளடக்கம்!

ஆசிரியன்..
சிறகு முளைத்து பறக்கும்..
மாணவ செல்வங்களின்..
முதல் ரசிகன்!

ஆசிரியன்..
ஊக்கமற்றவனின்..
உற்சாக ஊற்று!

ஆசிரியன்..
தவறுகளை கோடிடும்..
பயிற்சியாளன்..
எதிர்கால தூண்களின் அடித்தளம்!

ஆசிரியன்..
நம் வாழ்வின் கணிதம்..
உறவுகளின் அறிவியல்..
நட்பின் பூகோளம்..
அனுபவங்களின் வரலாறு!!!

ஆசிரியன்..
ஒரு சமூகத்தின் குரல்..
நல்வழிகளின் திசைகாட்டி!!!

No comments:

Post a Comment