அலட்சியங்களின்
ஆபத்து..
விபத்து!!
விபத்து!!
கருகினான்!
காக்க சென்றவனும்..
பொசுங்கினான்!!
விபரீதங்களோடு..
தினம் தினம் தெரியாமல்..
விளையாடிய உயிர்கள்..
இன்று மயானங்களில்..
கனவுகள் கருகி!
பல இல்லங்களிலும்..
உள்ளங்களிலும்..
தீபஒளி ஏற்ற..
பணிபுரிந்தவன் இல்லத்தில்..
இன்று-
அகல்விளக்கில்..
மரணஒளி ஏற்றி..
இறுதி அஞ்சலி!
நிலை மாறினாலும்..
உலகில்-
உயிர் விலை மாறாது!!
உணவே மருந்தென்ற
நிலை மாறி..
மருந்தில் வேலை செய்தாலே..
ஒரு வேளை உணவென்று வாழ்ந்த..
அறியாமை ஜீவன்களுக்கு..
வெடிமருந்தே..
உயிர்கொல்லியானது!!
நிதிகளை கவனிக்கும்..
தொழில் வளாகங்கள்..
நிதியுதவி கொழிக்கும்..
அரசாங்கங்கள்..
விதிகளுக்கு..
தோள் கொடுக்க..
அடிக்கடி மறப்பது ஏனோ??

No comments:
Post a Comment