விடுமுறை நாளை..
மதுரைக்கு விடை காட்டி...
கொடைமலைக்கு..
வணக்கம் வைத்தோம்!
பயணித்தவரில்..
நூலைப்போல் ஒருவன்..
தூணைப்போல் இன்னொருவன்..
இவர் இருவரையும்..
மேய்த்துக் காக்க..
இன்னுமிருவர்!
டம் டம் பாறை!
தெரிந்தது..
அருவியின் எழில் தோற்றம்...
கண்டதும்..
மனதிலே ஒரு
புது மாற்றம்!
காரெட்டுகள் கூட..
காதல் சொல்லும்
ரோஜாக்கூட்டம்!
இதோ மலைக்காடுகளில்..
இளமனங்களின்..
சேட்டைகள் ஆரம்பம்!
குளிர்க்கண்ணாடி..
புதுப்பொலிவுடன்..
சிவனும் பார்வதியுமாய்...
நாம் அருள் பாலித்ததை..
மரங்கள்
அதிசயமாய் தரிசித்தன!
அந்த
சாய்ந்த மரத்தில்..
நம்பிக்'கை' விரித்து..
ஒற்றை கால் தூக்கி..
தனித்து நின்றோம்..
துணிவே துணையாக!
தீயவை
கேளாதே..
பேசாதே என..
ஒருபோதும் அண்ணல்
போதித்திருக்க மாட்டார்..
நம் குரங்கு சேட்டைகளை
கண்டிருந்தால்!
அந்த
சுட்டெரிப்பிலும்...
நம் சேட்டையின்
சுருதிக்கு குறைவில்லை!
மீண்டும்
கற்கால மனிதனாய்..
குரங்காய்..
பேன் பார்த்த நிமிடம்!
கப்பல் கவிழ்ந்தால்
நல்லவேளை
அன்று-
காட்டுக்கு
இரண்டாவது சனிக்கிழமை!
இல்லாவிட்டால்..
நம் குறும்பு பொறுக்காமல்..
அழிந்திருக்கும்!
குலுங்கி குலுங்கி..
சிரிப்பதற்க்கென்றே..
சிலையாய் நின்றோம்...
இறுதியில் வென்றோம்..
சேதுவாய் ..
சாதுவாய்...
அறிஞராய்...
துள்ளிகுதிப்பது..
இளமையின் அழகு..
வயதிற்கு அல்ல..
மனதிற்கு!
பாறைகளை
மட்டுமில்லாமல்...
மனித பாரங்களையும்..
குடைபோல
சாய்க்கலாம்...
என்றுணர்ந்த தருணம்!
மாமன் துணையிருந்தால்
மலை ஏறலாம்..
எங்கள் மாமனுக்கும்..
மச்சானுக்கும் தெரியாமல்..
மலை ஏற முடியாமல்..
சோகத்தோடு
சோர்ந்து நின்றோம்!
வானில் மட்டுமே
பார்த்த நிலவினை..
கலர் கலராய்..
சோப்பு நுரையில்..
ரசித்த அதிசயம்!
நீ பாதி
என்னில் நீ மீதி..
என்று
ஜோடி பார்த்த
அழகு குட்டி செல்லம்!!
தெரியாமல்..
கால்
தரையிலாமல்..
காற்றில் மிதந்த..
அழகிய காலம்!
காலம் வீணாக்காமல்..
எந்த பெண்ணிற்கும்
பூ கொடுத்து..
எங்கள்-
காதில் வைக்கும்முன்..
நண்பர்கள்
நாங்களே சூடிக்கொண்ட..
மதிநிலை காலம்!
இல்லாமல்..
லட்சியத்திற்கு
மட்டும்..
வைக்கப்பட்ட
தவறாத குறி!
ஏரிப்படகில் ஏறி..
எமக்கு பிடிக்காத
'வாத்தி'களின் தலை
என்றெண்ணி..
மேலும் வேகமாய்..
மிதித்தோம்
குதூகலமாய்!!!
கவிதை சொல்லவா..
பறந்து செல்லவா..
பூவோடு பேசவா..
என்று கேட்டோம்
நிஜத்தினில் பொய்யாய்..
நிழல்படத்திற்கு மட்டும்
மெய்யாய்!!!
நண்பர்கள்..
ஒன்று சேர்ந்தால்
சந்தோஷம்..
ஒன்று குறைந்தாலும்
சங்கடம்!
அன்றைய திருவிழாவில்..
ஆறில்..
இரு 'தலை' கட்டு!
சேர்ந்திருந்தால்
இன்னும் பெரிய 'ஹிட்டு'!
நட்பின் நாட்கள்
என்று..
நினைவுகள்
சேமிக்கப்பட்ட காலம்..
கொடைக்கானலில் மட்டும்-
அது ஒரு கனாக்காலம்!!!



Nach varihal ::
ReplyDeleteலட்சங்களுக்கு
இல்லாமல்..
லட்சியத்திற்கு
மட்டும்..
வைக்கப்பட்ட
தவறாத குறி!
Thank you Ish :-)
Delete