பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Mar 13, 2010

மண்ணை விட்டு...

மழை வரும் இனி..
ஆனால் வாசம் தெரியாது!!!
வெயில் அடிக்கும் இனி..
நிழல் மண்ணில் பதியாது!!
என் வானின் வெட்கம்...
வானவில்..
ஆனால் ரசித்திட..
செல்லில் படம் பிடித்து..
அனுப்புங்கள்!!!
ஊரெங்கும் தழுவியிருக்கும்..
ரோட்டின் வேகத்தடையும்..
சந்தின் சர்வ திசையும்.
ஐம்புலன் அறியும்!!
மாற்றம் இருந்தால்..
தந்தி அனுப்புங்கள்!!
திருவிழா.. தேரோட்டம்..
இனி எனக்கு...
செய்திகளில் தான்!!!
மண்ணைவிட்டு செல்கிறேன்..
மனம் மட்டும் மடிந்து!!!

2 comments: