பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Mar 13, 2010

தொலையவில்லை



அது ஒரு காலம்..
நீ தொடங்குவாய் என நானும்..
நான் தொடங்குவேன் என நீயும்..
தனிமையினை மௌனமாய் கரைத்தோம்!!
அது ஒரு காலம்..
நீ பார்க்காதிருக்க ..
ஏக்கம் கொண்டது..
என்னுள்ளம் சுகமாக!!
ஏனெனில்-
நீ பார்த்துவிட்டால்...
பாவை உன் பார்வை ..
எனைக் கொல்லத் துடிக்கும் சுகமாக!!
அது ஒரு காலம்..
உனைத் தீண்டி வந்த தென்றலை..
நான் தேடிபோய்..
தொலைந்து போனேன் எங்கோ!!!
கண்டுகொண்டேன் பிறகு...
இந்த பித்தனை..
இனித்துக் கொண்டிருப்பது..
உந்தன் மூச்சு!!!
அது ஒரு காலம்..
என் கனவுகளையும்...
உணர்வுகளையும்...
கவிதைகளாய் கோடிட்டேன்..
உன் பதில் நிரப்ப!!
இன்றோ-
விடை தெரிந்தும்..
விதியால் இருவரும் தொலைவில்!!
ஆனால்-
தொலையவில்லை..
அந்த காதல்!!

No comments:

Post a Comment