என்னுயிர் தோழியாய் நீ!!!
விரல்கள் உன்னை முத்தமிட்டால்..
எதிர்முனையில் கேட்டிடும்..
குசலசத்தம்!!!
யாரோ எனை அழைக்க..
நீ- சிணுங்குகிறாய்!!
காதலுக்கு கண்ணில்லை..
செல்லுண்டு!!
வாகனம் ஓட்டிடும் வேளையில்..
எமனின் குரலாய் நீ!!!
அழுதிடும் பிஞ்சிற்கு..
அதிசய பொம்மையாய் நீ!!!
இதயங்களை இணைத்திடும்...
பாலம் நீ!!!
சில உறவுகளை அறுத்திடும்..
பாரம் நீ!!!
விடியலை முழக்கமிடும்..
அற்புத சங்கு நீ!!!
செவியில் நீ...
சதா குடிகொண்டிருந்தால்..
மனிதனின்..
அபாய சங்கும் நீ!!!

No comments:
Post a Comment