திரும்பிப் பார்க்கின்றேன்..
மழைக்காலம் ஒன்றில்..
ஓர் குடையில் இருவரும்..
ஒருவராகிப் போனோமே..
அந்த ஒற்றையடிப் பாதையில்..
மீண்டும் பாதம் பதிக்கிறேன்!!
தென்றலின் தீண்டலில்..
நம்மை மறந்து...
மண்ணிலிரிந்து..
விண்ணில் பறந்த..
அந்த வழியை தேடுகிறேன்!!!
பூவின் மலர்ச்சியை..
உன் புன்னகையில் கண்டேனே...
அந்த முகவரியை தொலைத்துவிட்டு..
இந்த பிரபஞ்சத்தில் வாடுகிறேன்..
தொலைந்துபோய்!!
உன் பைந்தமிழில்...
தாகம் தீர்த்த என் செவி..
மீண்டும் உன்னை கேட்கிறது!
தடுமாறும் மனம் பதில் சொல்ல!!!
இப்பொழுதும்-
எங்கோ..
என்னில் ஓடுகிறது!!!
உலகோடு நீ வீழ்ந்தாலும்..
உள்ளத்தின் ஓர் ஓரத்தில்..
நீ வாழ்ந்துகொண்டுதான் இருப்பாய்!
அதில் நானும் வாழ்வேன்!!
.jpg)

.jpg)
.jpg)

No comments:
Post a Comment