நினைவெழுத்துத் தொகுப்பினை..
சில அகவை கழித்து..
இன்று நினைவு திருப்பிப் பார்க்கின்றேன்!!
இன்ப சரக்கினையும்..
கவலை முருக்கினையும்...
சமைத்து சுவைத்து..
நடந்து வந்த பாதையினை..
இத்தனை நாட்கள் கடந்து பார்க்கையில்..
முகத்தில் ஒன்றை காணவில்லை...
அது-
புன்னகை என்று நானறிந்தேன்!!
புன்னகை சிந்திய தேனிதழில்..
உன்'மை' மட்டும் எழுதிய..
என் இதயத்தின் பக்கங்கள்!
வெறும் ஆரம்பம் படிக்க துவங்கிய...
என் எழுத்துத் தொகுப்பில்..
ஒரு தொய்வு!
மயானபூமியின்..
மௌனயாத்திரையில்...
உலாவரும்..
உன்'மை' பயணம்!!!
சிலந்தியின் கோட்டை..
உன் சிந்தனை வேட்டையிலிருந்து..
நான் விடுபடுவதும்..
புதிதன்று..எளிதன்று!!!
உன்'மை' நிரப்பி!!
இன்றும்-
என் இதயத்தின் பக்கங்கள் தொடர்கிறது..
இந்த இன்மையில்..
இதயத்தின் இறுதி பக்கம் வரை..
என்ன எழுத்து..
என்று படிக்க!!
உடன் நீ இருந்தால் சுகம்...
இல்லாமல் போனால் ரணம்!!!
.jpg)
.jpg)
.jpg)


Super boss!!! However is the man at the moment - so are his works! shows its always about the way u feel!! kalakkal!!!
ReplyDeleteNandri!!
ReplyDelete