ஈன்றோர் காட்டிடும் கோவில்..
இங்கே-
எழுத்தரிவிப்பான் இறைவன்!
கரும்பலகையில்
வாசிக்கும்...
உயிரும் மெய்யும்..
வண்ணக் காவியம்
பாடிடும் தமிழில்..
என்றென்றும்!கருவறை வெவ்வேறானாலும்..
சாதி..மத..
நிறம்..இனம் மறந்து..
நட்பினில் கனிந்திடும்..
மழலை கால..
ஊஞ்சல் சண்டை!
அறிந்தும்..அறியாமலும்..
இழைக்கும் பிழைக்கு..
தண்டனை உண்டாம்.
அது-
மன்னிப்பு!
மனம் திரிந்திடும்..
ஒரு வாய்ப்பு!
போட்டிகள் உண்டு..
திறமைக்கு..
தடைகள் இல்லை..
கற்பதற்கு..
ஊக்கங்கள் என்றேன்றுமுண்டு..
இங்கே சாதிப்பதற்கு!
ஆசிரிய சிற்பிகளின்..
கலைக்கூடம்..
மாணவ சிற்ப்பங்களின்..
கல்விக்கூடம்..
இந்த பள்ளிக்கூடம்!!!






No comments:
Post a Comment