விடியலைத் தாண்டி வந்தாலும்..
இரவைத் திருப்பிப் பார்க்கின்றேன்!
நினைவெல்லாம் உன்னில்!!
நிலத்தில் நடந்து செல்கிறேன்..
நிழலாய் நீ ...
என்று நிகழ்ந்தது..
இந்த மாற்றம்??
என்னில் நீ நிஜமானாய்!!
தெரியவில்லை..
ஆனால்-
என்னில் நீள்கிறது!!
கரையை தொடும்..
அலையைப் போல்..
என்னைத் தொட்டு தொடர்ந்திடும்..
உன் ஞாபகங்கள்!!!
வியர்வைத்துளி படர்ந்திருக்க..
மறைந்ததெங்கோ..
தெரியவில்லை..
உன் மூச்சுக்காற்று பட்டவுடன்!!
குளிர்காய சென்ற நெருப்பு..
உன் ஓரவிழிப்பார்வையில்..
காயம்பட்டது.. என் மனம்போல்!!
வானமாகிவிட்ட என் மனதில்..
மேகங்களாக நீ ஓடுகிறாய்..
வானவில்லாய்..
நீ புன்னகைத்தால்!!
பஞ்சபூதங்களில் நீ..
உணர்கிறேன் பெண்ணே..
மரணமும்..
ஜனனமும்..
காதலில் ஒன்றாய்!!
.jpg)

.jpg)
.jpg)

No comments:
Post a Comment