வெண்ணிலா நிற சுருள் நீ...
இரு விரல் பற்றி..
உன்னை பிடித்தேன்..
உனக்கு பிடித்ததோ..
என் இதயம்!
அனல் பற்றினால்..
தேய்பிறை நீ..
உன்னோடு நானும்!
வாய் வழியும்..
செவி வழியும்..
வட்ட வட்ட..
குட்டி நிலவுகள்!
காண்போருக்கு..
கொடைக்கானல் பனிமூட்டம்..
என் நாசியிலே..
புகை பகை மூட்டும்!
சுவாசம் ஆனது..
உன் வாசம்..
நான் பலரை..
முந்தி செல்வேன்...
எமன் வசம்!
அன்பின் பரிமாணம்..
முத்தம்..
என் இதழ்கள் உன்னை..
முத்தமிடும்போது..
எனதுயிர் பரிமாடிடும்!
மங்கை மீது கொண்ட..
காதலை போல் இது..
அழகாய் இருக்கிறாய்..
பயமாய் இருக்கிறது!
குழல்வர்த்தியா நீ??
இல்லை-
நீ என்னை கரைக்கும்
உயிர்வர்த்தியா???
இரு விரல் பற்றி..
உன்னை பிடித்தேன்..
உனக்கு பிடித்ததோ..
என் இதயம்!
அனல் பற்றினால்..
தேய்பிறை நீ..
உன்னோடு நானும்!
வாய் வழியும்..
செவி வழியும்..
வட்ட வட்ட..
குட்டி நிலவுகள்!
காண்போருக்கு..
கொடைக்கானல் பனிமூட்டம்..
என் நாசியிலே..
புகை பகை மூட்டும்!
சுவாசம் ஆனது..
உன் வாசம்..
நான் பலரை..
முந்தி செல்வேன்...
எமன் வசம்!
அன்பின் பரிமாணம்..
முத்தம்..
என் இதழ்கள் உன்னை..
முத்தமிடும்போது..
எனதுயிர் பரிமாடிடும்!
மங்கை மீது கொண்ட..
காதலை போல் இது..
அழகாய் இருக்கிறாய்..
பயமாய் இருக்கிறது!
குழல்வர்த்தியா நீ??
இல்லை-
நீ என்னை கரைக்கும்
உயிர்வர்த்தியா???

No comments:
Post a Comment