பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Feb 7, 2010

நட்பினிலே


காற்றுக்கு..
கொள்ளை பெருமை..
நம் நட்பினை-
நீட்டிக்க செய்ததில்!
வெயிலுக்கு..
பெருத்த ஏமாற்றம்..
நம் அன்பு-
கானல்நீர் ஆகவில்லையென்று!
வானத்திற்கு..
மிகுந்த அச்சம்..
நம் உறவு-
அதன் எல்லையை..
நீண்டிடுமோ என்று!
நிலத்திற்கு..
கடமை வருத்தம்..
நம் உடலை-
விழுங்கிடுமே என்று!
எனக்குள்..
சிறு புன்னகை..
இந்த உறவு புரிந்த..
தெய்வங்கள் உணர்கின்றதை..
நம்மில்-
சில மாணிக்கங்கள்..
செய்ய தவறுகிறதே.. தோழி!!!

No comments:

Post a Comment