உனக்கு எங்கள் வர்க்கத்தோடு..
வாழ விருப்பமா?
அரும்பாடுபட்டு இரவில் நீ..
சுதந்திரத்தை பெற்றுத்தந்தாய்..
விடியும் என்று எண்ணி!!
ஆனால் இன்று-
விடிந்த பிறகும்..
இருளில்தான் மூழ்கிக்கிடக்கிறோம்!
இதோ-
இந்தியாவின் ஒளி..
இருள்கிறது..
தூவுகுறேன் கேள்!!!
வீதிக்கொடிகளில்...
பலவண்ண துணிகள் அல்ல..
'கட்சிக்கொடிகள்'!!!
மாணவன் அறிவிற்கு...
இன்று-
அவன் முதுகிற்கு பாரமாய்!!
கனவுகள் கோடி..
எல்லாம் இங்கு ஒன்று கூடி..
தொட்டுவிடும் தொலைவிலே..
வாழ்க்கை என்றெண்ணி..
வீதியிலே..
வேலைவாய்ப்பு வரிசையில்..
சதம் அடிக்கும்.. 'பட்டதாரி'!!!
வான் தெளிக்கும் பன்னீரில்..
அன்னைபூமி கன்னத்தில்..
அது-
மக்கள் நாங்கள் செல்லும்..
மரணக்குழி!!!
பசி..
பட்டினிச்சாவு ஒருபுறமிருக்க...
தானியங்கள் ஏற்றுமதி மட்டும்..
'அமோகம்'!!!
உழைக்கா சோம்பேறிகளை..
உயர்த்திப் போற்றி..
பாதுகாத்திடும்..
'அன்னதானம்'!!
நியாயம் மறந்த..
அ'நியாயவிலை' கடைகள்!!
கரையான் படியும் வேலையில்..
தியேட்டரில்..
மாணவவெள்ளம் கரை புரளும்!!
விண்ணிலே மிதந்து..
மண்ணிலே புதைகிறான்..
கண்ணிய 'குடிமகன்'!!!
நாட்டை காத்திடும்..
காவலன் குடும்பம்..
கயவன் கருணையில்..
சுடுகாட்டை நோக்கி..
'இன்னல்' பயணம்!!!
நம்மை திட்டிக்கழிப்பான்..
நாம் கூப்பிட்டகுரலுக்கு..
ஓடோடிவரும்..'வேட்பாளன்'!!!
எதை சொல்ல??
காலை நேரத்தில்கூட..
எங்களால் சுதந்திரமாக..
நடமாடமுடியாததை சொல்லவா?
அல்லது..
வருமானவரிக்கு..
நாமம் போடும்..
மூன்றுவேளை உணவிற்காக..
மானத்தை கூருபோடும்..
மங்கையரைச் சொல்லவா???
இதுபோல் இங்கு..
இன்னும் ஏராளம்..
தெரிந்துகொள்..
நாங்கள் அனுபவிக்கும்..
சுதந்திரத்தை!!
இது என் ஒருவனின் தாகம்..
இன்னும் நூற்றுபத்துகோடி தாகம்..
தணியாமல்..
தாகத்திற்கு ஏங்கிக்கிடக்கிறது!!
மன்னித்துவிடு மகாத்மாவே..
உனது சேவை..
மீண்டும் இங்கு தேவை!!
விழித்திருந்து ஒத்துழைக்க..
இங்குண்டு-
நூற்றுக்கும் மேற்பட்ட..
'சகாத்மா'!!
ஆனால்..
வீழாதிருந்து வழிநடத்திச் செல்ல..
தேவை இங்கு..
ஒரேயொரு 'மகாத்மா'!!
புறப்பட்டு வா...
இந்தியாவை ஒளியேற்ற..
கூடிஇருப்போம் நாங்கள்-
தீமைகளை வெளியேற்ற!!
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)

I remember reading this...U wrote dis durin school or coll rite???
ReplyDeleteYes dude.. This won the I prize in Mello flavours 2003!!!
ReplyDelete