பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Oct 26, 2010

மீண்டும் மலர்வேன்...

இறைவன்
 எனக்கருள்ந்த..
ஆயுள் தண்டனை..
'அம்மாஎன்று..
என்றும்..
என் வாய் மொழியாது!! 

எழுத்துக்கூட்டி..
தினம் தினம்..
மனதில் மட்டும்..
உன்னை நான் படித்தேன்..
'அம்மா'! 

தரையில்..
கண்ணயர்ந்தாலும்..
மூடிய விழி திறவாமல்..
உன் மடி தேடி..
தூக்கம் தொலைக்கும்! 

உச்சி முகர்ந்து..
என் நெற்றி தழுவி..
அன்பாய்..
என் கன்னத்தில்..
இதழ் பதித்தால்..
மிருகமாய் மடிவேன்..
மீண்டும்-
மழலையாய் மலர்வேன்!!

No comments:

Post a Comment