தினம் தினம்..
நீ தெரியாமல்
இல்லம் செல்கையில்...
இத்தனை தியாகங்களுக்கு இடையில்..
அனைத்திற்கும் மேல்..
கணினி கற்ற மானிடா..
உன்னை..
என் முன் அமர்கிறாய்...
என் உயிரணு அழுத்தி..
நான்-
கண் திறந்து பார்த்தால்..
உன் முகத்தில்..
ஒரு நாளும்..
நான் கண்டதில்லை..
மகிழ்ச்சி!
மாறாக..
உன் கண்களில் மிரட்சி!!
நீ தெரியாமல்
இழைக்கும்..
பிழைக்கும்...
என் தோழரிடம் பிறக்கும்..
குறைக்கும்..
எனக்கு புரியாத..
அரைவேர்க்காடு
அர்ச்சனை கூவி..
மொத்தமாக
முகம் சுழிப்பாய்..
என்னிடமே!!!!
இல்லம் செல்கையில்...
என்மேல் சிறு-
எனை-
உறங்க வைக்க..
மறந்துவிட்டு..
நில்லாமல்..
ஓடிவிடுவாய்!!
விடியும் வரை...
விடியல்-
மலர்ந்த பின்னும்..
உன்-
வருகைக்கு காத்திருந்து...
மீண்டும் உன்னிடமே..
சரணடைகிறேன்..
நாள்தோறும்!!
இத்தனை தியாகங்களுக்கு இடையில்..
நீ பிறரிடம்...
என்னை கண்டால்...
உன்-
மல்லிகை கண்களுக்கு..
எரிச்சலாம்...
உன்னை கண்டு..
நானும் தினம்...
சூடாகிறேன்...
ஒரு கணம்..
நான் அயர்ந்திருப்பேனா?
அனைத்திற்கும் மேல்..
நீ சந்தோசத்தில்..
திளைப்பாய்..
கார்த்திகைக்கு ஒருமுறை..
பௌர்ணமிக்கு ஒருமுறை!!
அன்று-
ஒன்றுகூட்டி...
வெற்றியை பகிர்வாய்..
என் அழகு முகத்தில்..
ஆள்காட்டும் விரல்வைத்து..
என்-
கண் குத்தி காட்டுவாய்..
எந்த லோகத்து நியாயமாடா?
கணினி கற்ற மானிடா..
உன் கழுத்தை சாய்த்து..
திருப்பி பார்க்கிறாய்..
முறைக்கிறாய்..
உணவுண்டு விட்டு..
உன் கெட்ட ஆவி ஊதி..
தூங்கி வழிகிறாய்..
மூக்கில் விரலைவிட்டு..
தூர் வாருகிறாய்...
எனக்கும் உன் மேல்..
வெறுப்படா..
பிடிக்கவில்லை..
உன்னையே தினமும்..
கண்டு ரசிக்க...
ஆண்டவனிடம்
முறையிட்டால்...
அவனிடமே-
பாவம் அங்கு..
ஏகப்பட்ட சர்ச்சை!!!
உன்னை..
தொடைத்துவிட்டு..
சென்றுவிடுவாய்..
அதனால்தானடா..
என் குல மக்கள்..
இறுதியில் புகைந்துபோய்..
மடிகின்றார்!!
உயிர் வாழும் உனக்காக..
உயிரற்ற என்போன்றோரை..
இனியும்..
அலட்சியம் செய்யாதிரு..
அற்பமானிடா!!

.jpg)

.jpg)
.jpg)


.jpg)


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
