பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

May 1, 2010

புன்னகை பிம்பங்கள்




உன்னிடம்..
காதல் கண்டது தெரியும்..
நீ காயம் தந்ததும்..
உனக்கு தெரியும்...
மீண்டும் என்னை..
முற்றும் மறந்து..
உன்னிடம் எதிர்பார்ப்பு துறந்து..
தொடர சொல்கிறாய்..
இறுதிவரை...
உறுதியாய்!! 

ஆனால்-
நங்கையடி..
உன் மொழியில்..
ஒவ்வொரு நொடியும்..
வலி ஊமையாகிறது...
உன்னை-
தொலைக்கவும் முடியாமல்..
பாரம் தாங்கவும் முடியாமல்..
மனம் கிழிகிறது!!! 

மரணம் நித்தம் நித்தம்..
எட்டி எட்டி பார்த்து...
கைகுலுக்கிவிட்டு..
உயிரை உலுக்கி எறிந்து..
என்னை தொலைதூரம்...
தூக்கி எறிகிறது!! 

கண்ணீரும் காயமும்...
வறண்ட சருமத்தையும்..
மரத்த மனத்தையும்..
இதழ் பதிக்க..
மூச்சும் பேச்சும்...
மயான ஊர்வலத்தில்!!! 

அழகிய மழலையை..
அழுத்தமாய் கிள்ளி...
புன்னகை சிந்த...
கட்டளையிடுகிறாய்!
இதழ் சம்மதித்து..
புன்னகை மழை...
சிந்தும் வேளை..
விழியோரம் ஈரம்..
கட்டுக்கடங்காமல்..
விட்டு விடு என்றென்னை..
மன்றாடுதடி



கண்ணாடி மனம்  மீது..
கல்லெறிந்து..
புன்னகை பிம்பங்கள்..
பூக்கச்சொல்லும் அவலம்!!! 


இன்னும் எத்தனை நாள்..
உன் நினைவால்..
உறங்காமல்..
விழிகளை தண்டிப்பது?
உன்னை மறக்க சொல்லி...
என் இதயத்தை கண்டிப்பது?

3 comments:

  1. karthikeyan .. ena oru algana kavidhai.. enaku edhuvum teriyadhu.. but ondru nandraga teriyum.. time will heal.. nee manadhuvaithaal thukipoda mudiyadhadhu eduvum alla..

    you have one of nicest hearts i have ever seen, so pure.. if she doesn come then it means something better is waiting for you..

    life always has its complicated plans machan ..
    if u taste the ingrediants of the food it will taste bad, but the food is on its way..ur just tasing the ingrediants..
    great poem..un vali enaku purigiradhu..

    ReplyDelete
  2. I understood one thing very clearly. I have been good and am still good. And being honest to my heart, make things complicated. Time keeps on changing and I am trying to change myself, which I could not do it for years.Anyway, will keep going!!!

    ReplyDelete
  3. time not only heals but also teaches.... do learn

    take care.... do not forget that you are not alone
    :)

    ReplyDelete