பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

May 23, 2010

நினைவலைகள்




காலம் கடந்தும்..
பருவம் தொலைந்தும்..
நம் மழலை தெருவிளையாடல்..
இன்றும்...
திருவிளையாடல்!!!

முத்தம் வாங்க..
முகம் காட்டி..
மழலை குயில்..
உன்னிடம்..
கடி வாங்கி...
பச்சிளம் பல்..
பதிந்த கன்னத்தை..
நான் கண்ணீர் மல்க..
தேய்த்த சுகமான நாட்கள்!!!

பெரியவர்..
தெரிந்தவர்..
புரிந்தவர் என..
அனைவரும் நகைக்க..
வெண்பிஞ்சு கரம்..
நீர்குளம் நிரப்பிய..
என் விழியினை...
உன்-
கன்னக்குழி சிரிப்பில் வாங்கி..
பால்நிலா பல்..
பதிந்த அதே இடத்தில..
என் உச்சி முகம் மலர...
மீண்டும்.. மீண்டும்..
முத்தமிட்ட அழகான நாட்கள்!!!

ஆலமரத்து ஊஞ்சலும்..
ஓடக்கரை காற்றும்..
நம் குழந்தை பேச்சில்...
கவிதை கேட்ட..
இனிமை மட்டும் நிறைந்த நாட்கள்!!

அங்காடியில் எடுத்த..
ஒற்றை கடலைமிட்டாய் மீது..
இருவர் கண்ணும் படர்ந்திருக்க..
தாவணி விளிம்பில்..
மெல்ல உள்ளடக்கி..
உன் காக்கைகடியில்...
நா சுவைத்த அன்பான நாட்கள்!!

பருவம் மாறியதும்..
மங்கை முகம் காணவில்லை..
விதியோடு..
வீட்டு சதியோடு..
பால் இடைவெளி புரிந்த..
கசப்பான நாட்கள்!!!

நட்பில் தப்பு எண்ணிய..
நாட்டமை கழுகுகளிடம்..
கற்புண்டு நட்புக்கு..
என்று மூடர்முகத்தில்..
நீ நெருப்புமிழ்ந்த..
அர்த்தமான நாட்கள்!! 

அன்னை திட்டியும்..
தந்தை தடுத்தும்..
அண்ணன் தட்டியும்..
ஜன்னல் வழி வந்து...
உன் கண்ணின்..
ஆனந்த துளிமணியும்...
வளையோசை முகாரிகளும்..
எனக்கு பிரியாவிடை கொடுத்த..
அந்த ரணமான நாட்கள்!!!

கருவறை வெவ்வேறாயினும்...
கனிந்தோம்..
நட்பென்னும் கடலினிலே!!
கடலுக்கே சொந்தம்..
அந்த-
அழகு ஞாபக அலைகள்!!
என்றும் கரை சேராத..
இன்பம் குறையாத..
நினைவலைகள்!!!

No comments:

Post a Comment