கவிதைகளாய்...
காவியம் பாடவா காதல்???
விழியில் விழுந்தாய்...
உளியால் சிதைத்ததேனோ???
வலியோடு!!!
மனவிருந்து என்றிருந்தேன்..
காதலை!!!
காயப்படுத்தி சென்றுவிட்டாய்..
உன் மனமுவந்து!!!
காதலை..
இன்றும்-
வாழ்வித்துக்கொண்டுதான் இருக்கிறது..
ரணமாகிப் போன என் மனம்!!
என்ன செய்ய??
வானுக்கு சொந்தம்!
கரை சேரா அலைகள்..
கடலுக்கே சொந்தம்!!
உறவோ பிரிவோ..
நீயே என் பந்தம்!!
மனம் மறக்கவில்லை..
உன்னிடமிருந்து விலக!!
என் நினைவுகளுக்கு..
வேலியாய் நீ!!
நீ இல்லை!
உன்னை பழி சொல்ல..
மனமில்லை!
புலம்புவதில் நியாயமில்லை!!
என்னதான்...
என் கால்த்தடம் பதித்த..
அந்த ஏணிப்படிகள்..
நீதானே!!
விதியின் எழிலொன்றை பார்த்தாயா??
நம் காதல் பிறந்த இந்நாளில்..
நான் வடிக்கும் பிரிவினை..
உலகோடு நீயும்
படிக்கின்ற கோலம்!!
தண்டனை என்று மட்டும்..
எண்ணிடாதே..
சுருங்கிய உயிர் மடிந்திடும்!!!
எனை புவி பழித்தாலும்..
என்றும்-
நான் உன் பித்தன் என்பதை..
நீ அறிவாயா?? :)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)


No comments:
Post a Comment