பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

May 23, 2010

உன் சுவாசம் வீசும் தோட்டத்திலே..


கவிதை எழுத தொடங்கிவிட்டால்...
உந்தன் ஞாபகம் வருகிறது..
உந்தன் ஞாபகம் வந்துவிட்டால்..
கவிதைகள் தன்னால் வருகிறது!!

நிலவு மலர தொடங்கிவிட்டால்..
உந்தன் முகமே தெரிகிறது..
உந்தன் முகமே தெரிந்துவிட்டால்..
நிலவு வானில் மறைகிறது!!

மண்ணில் நின்று..
நான் தவிக்கின்றேன்..
விண்ணில்..
உனையடைய துடிக்கின்றேன்..
பறவையின்-
சிறகை கேட்கின்றேன்..
சிறகடித்து செல்ல விழைகின்றேன்!!

தடை எதிர்த்து..
உன்னை பிடிக்கின்றேன்..
படை தொடுத்து..
பகை எதிர்க்கின்றேன்..
உன் சுவாசம் வீசும் தோட்டத்திலே..
வாசப்பூவாய் பூக்கின்றேன்!!!

No comments:

Post a Comment