பட்டாம்பூச்சி ஆட்டம் ஆடிடும்
மனது..
உன் குழந்தை வயது!
பொய்யும்.. மெய்யும்..
மழல்வாய் அமுதம்..
கேட்டுக்கொண்டே..
உள்ளம் ரசித்திடும்..
நித்தம்..நித்தம்!
உலகம் மறப்பான்..
மனிதன் உன்னால்!
கடமைகள் செய்வான் ..
உனக்கு எல்லாமே..
நன்னாள்!
கையில் உன்னை..
ஏந்தி கொண்டால்..
அன்னை மனம் பெற்றிடுவோம்!
அன்பின் நெஞ்சம் நீ..
அதுதான்-
கடவுள் என்று நம்பிடுவோம்!

No comments:
Post a Comment