பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Jan 27, 2014

அரசமரத்து தெரு அழகி


என் கண்முன்னே..
காணாமல் போகின்ற..
ஒரு கானல் நீரா 
காதல்?

என் நெஞ்சுள்ளே..
தீராத தாகம் தீர்க்கின்ற..
பெண்ணே 
நீயா காதல்?

விழி திறந்தால்..
நீ எங்கென்று..
அலைபாயும் 
எந்தன் மனம்!

விடை காணாமல்
விழி பிதுங்கி..
மனம் காணும் 
நித்தம் ரணம்!

கோளாறெல்லாம்
பாலாறு போல்..
நெஞ்சிநிலே ஓடுதடி!

எங்கே என்று..
எனை கேளாமல்..
கால்கள் எங்கோ போகுதாடி!

இல்லை என்று
நீ போனாலும்..
அரசமரத்து தெரு அழகி
ன்னை சுற்றி..
ன் ஞாபகங்கள் வாழுமடி!

1 comment:

  1. அந்த நினைவுகளை மறக்க முடியுமா என்ன...?

    ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete