என் கண்முன்னே..
காணாமல் போகின்ற..
ஒரு கானல் நீரா
காதல்?
என் நெஞ்சுள்ளே..
தீராத தாகம் தீர்க்கின்ற..
பெண்ணே
நீயா காதல்?
விழி திறந்தால்..
நீ எங்கென்று..
அலைபாயும்
எந்தன் மனம்!
விடை காணாமல்
விழி பிதுங்கி..
மனம் காணும்
நித்தம் ரணம்!
பாலாறு போல்..
நெஞ்சிநிலே ஓடுதடி!
எங்கே என்று..
எனை கேளாமல்..
கால்கள் எங்கோ போகுதாடி!
இல்லை என்று
நீ போனாலும்..
அரசமரத்து தெரு அழகி
என்னை சுற்றி..
உன் ஞாபகங்கள் வாழுமடி!


அந்த நினைவுகளை மறக்க முடியுமா என்ன...?
ReplyDeleteரசித்தேன்...
வாழ்த்துக்கள்...