நடக்கும் பேரம்!
இன்னாரிடம் மட்டுமே
பரிமாறிடும் பேதம்!
இதயம் என்னும்
மயானக்காட்டில்..
காலம் கடந்தும்
காக்கப்படும் வேதம்!
சொல்லத் தவறினால்
ஆயுள் மிஞ்சும்!
சொல் தவறினால்
வாழ்வே நஞ்சும்!
அவசரமின்றி எவரிடமும்
செல்லாது...
அவசியமின்றி எவரிடமும்
சொல்லாது!
அவசியம் கண்டால்
என்றோ ஒரு நாள்
வார்த்தை விடுபடும்..
வெளிவரும் வரை
சொல்லாதவன் நெஞ்சம்
பாடுபடும்!
மனிதன் மடிந்து
மண்விட்டுச் சென்றாலும்
மனம்விட்டுச் செல்லாமல்
சொல்லாமல் போனவை
பல உண்டு!
சொல் குழைந்து
பலர் மனமுடைந்து
மனம் விட்ட சொல்லால்
மண் சென்றொரும் உண்டு!
இவை வாழ்வது இருளில்..
அதனால்தான் பலர் வாழ்க்கை
ஒளியில்!
ஒளியில் வெளி வந்தால்
பலர் வாழ்க்கை இருளில்!
ஒருவனிடம் தஞ்சம்
என்ற நம்பிக்கயில்..
தினம் வாழ்ந்திடும்
பதுங்கிய நெஞ்சம்!
ஆம்-
ரகசியங்கள் அப்படி!
அதன் அவஸ்தைகள் இப்படி!


No comments:
Post a Comment