பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Nov 29, 2014

அடையாளம்!



பழுத்து வாழும் மொழியாம்..
உலகில் எம்மொழி..
செவி கேட்கும் செம்மொழி...
எங்கள் தமிழ்மொழி!

எழுத்துக்கள் அணிவகுக்கும் அழகாய்...
எம்மெய்யில் உயிராய்...
உயிரில் உண்மையாய்...
எம் உரிமையாய்...உயிர்மெய்யாய்!!!

உயிரோடு மெய் சேர்ந்த எழுத்துக்கள்..
இனம் பெருக்கும்...
வல்லினமாய்...
இடையினமாய்..
மெல்லினமாய்!
இவையெல்லாம் காக்கும்...
காவல் தெய்வமாய் ஒற்றை எழுத்து...
அஃது ஆயுத எழுத்து!

சங்கம் அமைத்து 
தமிழ் வளர்த்த காலத்திலும் சரி..
பிறமொழி புகுந்தும்..
நீடிக்கும் நிகழ்காலத்திலும் சரி...
எந்த கலிகாலத்திலும் சரி...
தமிழ் - தமிழனின் அபிமானம்..
தமிழ் எழுத்தே தமிழின் அடையாளம்!!!

No comments:

Post a Comment