பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Dec 23, 2013

பழகுங்கள்!

அன்பொன்றே 
தெய்வம் என்று
தேவன் அனுப்பிய
தூது ஒன்று!
மாட்டு தொழுவத்தில் பிறந்த 
சிசு..
அவனே எங்கள் குழந்தை 
ஏசு!

போதிக்கவில்லை ஏசு 
மதத்தினை..
மானுட மனங்களில் பாவித்தார் 
அன்பினை!

கேட்டால் தான் எதுவும்
கிடைக்கும் என்று
கேட்க கேட்க கொடுத்தார்
ஈசன் ஏசு அன்பினை..
மக்களை ரட்சித்து!

தீது கவர்ந்த உள்ளத்திற்கு
உண்டாம் தண்டனை மன்னிப்பு..
அது மனம் திருந்திடும் 
ஒரு வாய்ப்பு!

குரோதங்களுக்கு புன்னகைகளை
பரிசளித்தார்..
ஏக்கங்களுக்கு பரிசுத்த
அன்பினை வாரிக்கொடுத்தார்!

உலகெங்கும் பரவியிருக்கும்
மனித மனங்களே..
நீங்கள் ஏசுவாகவேண்டாம்!
ஒவ்வொரு நாளும்..
உள்ளம் மாசில்லாதவராய்
பாசம் கொடுத்து..
வாழ்ந்து மகிழுங்கள்..
ஆண்டவன் அருளென்னும்
அன்பு மழையில் தினம்
நனைந்து பழகுங்கள்!

No comments:

Post a Comment