உனை பழித்து..
மடிந்தவனுக்கு..
மறுபிறவி வேண்டாம்...
மீண்டும் அழிவினை காண!
உன் இயற்கைதானே
எச்சரிக்கை மணி..
ஒலிக்காமல்..
எமனின்..
இன்னொரு தூதுவன்!!
அன்று..
உனை கொண்டாடிய மனம்...
இன்று...
மிரட்சியில்...
உன் ஆர்பரிப்பால்!!
அன்னை என்றெண்ணி..
வணங்கும் உன் செல்வங்களை..
நீயே பறித்தது ஏனோ?
உனக்கும் உண்டென்றால்..
மீண்டும் உனை..
அடையாளம் கொள்...
போரிடுவோம்..
துணிந்து உன்னிடம்..
அச்சமில்லாமல்!!
தோல்விகண்டால்...
பிரபஞ்சத்தை
தழுவிக்கொள்...
மனித மெத்தனங்கள்..
மூழ்கி மடியட்டும்..
மிச்சமில்லாமல்!!!






Its really good ... touching... :) :)
ReplyDeleteThank you... But remember we are witnessing our 'end of days'!!
DeleteThank you... But remember we are witnessing our 'end of days'!!
ReplyDelete