பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Mar 15, 2011

தோள் தளராதே..


கண்ணாடி அது..
தான் உடைந்தாலும்..
தன் துகள்களில்..
முடிந்தவரை தன்னால்..
பார்ப்பவர்..
முகம் காட்ட..
மறுப்பதில்லை!!
அணைகின்ற 
அகல்விளக்குகூட..
பிரகாசமாய் அழிகையில்..
ஏன் ஒற்றை தோல்விக்காக..
மதியும்..
மனமும் குன்றி...
ஒளிந்து ஒடிகிறாய்??
அழத்தோன்றினால்..
வான்மழைபோல் அழு..
வீழ்ச்சி கண்டால்..
கடலலைபோல் எழு!!
நினைவில்கொள்..
அடி-
நீ காணும் தோல்வியின்..
சுவடு..
வெற்றியின் முதல் வடு!
தூசுபடாத..
பொருளும் இல்லை..
மாசுபடாத..
மனிதனும் இல்லை..
தோல்வியின் கருவை..
உன் உள்ளத்தில்..
தாங்குவதேனோ??
சோதனைகள்..
பல வேதனைகள்..
எல்லாம் கடந்து..
வெற்றி பெறு..
வாழ்வில் நம்பிக்கை..
துளிர் விடு..
வானவில் வளைவதற்க்காக..
வான் வளையாது..
நண்பனே!!
தோல்விகள் தொடர்வதற்காக..
தோள் தளராதே..
அன்பனே!

No comments:

Post a Comment