பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Apr 4, 2010

சொதப்பல் ராஜா



அது பள்ளிப்பருவம்..
தீதும், நன்றும்..
அறியா உருவம்..
நம் ராஜா..
சொதப்பல் ராஜா!!

உணவை சுவைத்து...
வகுப்பறைக்கு.. 
சீறிய தருணத்தில்..
இனிப்பை மொய்க்கும்..
ஈகூட்டம் போல்..
சிறார் கூட்டம் பக்கம்..
திரும்பினான்..
ஜோதியில் ஐக்கியமும் ஆனான்..
என்ன விசேஷம் என்று அறியாமலயே!!

கரைந்தான் ராஜா கூட்டத்தில்...
"என்ன ஆயிட்டு?"
கூட்டத்தின் ஒவ்வொரு திசையிலும்..
ஒவ்வொரு ஈயும் கூவியது..
"ராஜா.. நம்ம ரெண்டாம் வகுப்பு 'நெத்திலி'!!!"
"அந்த சுண்டெலி..
மைதானத்துல கீழ விழுந்திட்டு...
"மண்ட உடைஞ்சு..
நெத்திலி நெத்தியில..
ஓட்ட  விழுந்துட்டு..."
அதிசயமாய்  கேட்டான்...
சொதப்பல் ராஜா!!

நெத்தியில ஓட்ட...
அதுவும் நெத்திலி நெத்தியில ஓட்ட..!!
எப்படி இருக்கும்??
ஓட்டம் எடுரா ராஜா..
அப்படி ஒரு விசித்திர காட்சி..
கண்டதில்லை ராஜா..
ஏன் கேள்விபட்டதுகூட இல்லை..
நம் சொதப்பல் ராஜா!!

ஓட்டம் பிடித்தான்..
மைதானத்தை நோக்கி..
நெத்திலி நெத்தியில் விழுந்த...
வட்டநிலா ஓட்டையை காண!!
ஒலி ஒன்று ஒலித்தது,,,
உணவு இடைவெளி  முடிந்த  ஒலி அது!!
மீண்டும்..
வகுப்பறை நோக்கி சீறினான்...
நெத்திலி நெத்தி ஓட்டை..
நேற்றோடு போயாச்சு..
காற்றோடு கரைந்தாயிற்று என்றெண்ணி!!!

நெல்லையும்..
பாண்டியனும்..
ரயில் பயணத்தில்..
முத்தமிட்டு..
பயணிகளை மாய்ப்பது  போல்..
சீறிய ராஜாவும்...
எதிரே வந்த...
பூச்சிபாண்டியும்...
முட்டி மோதியதில்...
பறந்தான் பூச்சி...
ராஜாவை  கீழ்  தள்ளி!!!

இமை புருவம்...
கிழிந்தது  தெரியாமல்..
எலும்பு  முறிந்தது..
புரியாமல்..
உள்ளங்கையால் குருதியையும்...
கண் புருவத்தையும் மறைத்து..
வகுப்பறைக்குள் நுழைந்தான்!!

மாணாக்கர் கூச்சலிட..
ஆசிரியை இருவர்...
ராஜாவுடனும்..
இன்னொரு கூஜாவுடனும்...
விரைந்தனர்..
மருத்துவமனைக்கு...
முதலுதவி தேடி!!!

உடன் வந்த...
கூஜவுக்கும் ஏதோ காயம் ..
மருந்து மட்டும் போதுமானது..
சால சிறந்ததும் கூட..
என்று பேசிக்கொண்டனர்..
அந்த மனித தெய்வங்கள்..
கூஜா பெயர் தெரியவில்லை..
ராஜாவுக்கு!!

தெய்வங்கள்  திரும்பின..
ராஜாவிடம்...
இமை மூடி...
திறந்து பார்த்த வேலையில்..
ஆசிரியை பொழிந்த...
மிரட்டல் மழையில் நனைந்தான்!!

"
ராஜா.. உனக்கு நாலு தையல் போட்டிருக்கு!"
"பாத்திரமா இருக்கணும்"
பள்ளி அலுவலகத்தில்..
ராஜாவுக்கும்,,,
கூஜாவுக்கும்..
பழரசச்சாறு..
பரிமாறப்பட்டது!!

ராஜாவிடம் திரும்பினான் கூஜா..
"எப்படி அண்ணே விழுந்தீங்க??"
எரிச்சலுடன் ராஜா..
நெத்திலியை நினைத்தான்..
காயத்தை விட வலித்தது!!
"அம்மா!!!"
வினவினான்..
"நீ எப்படி??"
"நான் மைதானத்துல ஓட்டம் புடிச்சப்போ..
கீழ விழுந்துட்டேன்"
சற்றே அதிர்ச்சி ராஜாவுக்கு...
பெயரைக் கேட்டான் கூஜாவிடம்..
"நான் நெத்திலி அண்ணே :) "



மின்சாரம் மிகையாய்..
பாயும் வேளையில்..
கருகும் கணினியைப்போல்..
நெஞ்சுக்குள் பொருமிய ராஜா...
"உன்னைக் காண வந்தேன்..
உன்னோடு என்னையும்.. 
அய்யகோ  ராமா"
அலறியபடியே மயங்கினான்..
நம் ராஜா...
நினைவறிந்து...
முதல் முறையாக..
சொதப்பிவிட்டு!!! :)

3 comments:

  1. Reminds me of us...we were really this stupid back then!!!

    ReplyDelete
  2. The above one was a real incident..And you know who was that Sodhappal rajaa???

    ReplyDelete
  3. It was me.. And you can still see the scar in my eyebrow :(

    ReplyDelete