நிஜம் தெரிந்தும்
அதில் குளிர் காய்ந்து...
முதுகின் பின்
மனம் தூற்றும்...
நேர்மையான உலகம்!
பார்த்து பார்த்து
நல்லவை செய்தால்..
உன்னை பகடையாய்
பயன்படுத்தும்
குள்ளநரி உலகம்!
பொறுத்திருந்து
உன் உணர்ச்சிகளை
எரிமலை போல்
திடீரென கக்கினால்...
உனக்கு
மரியாதை தெரியாது
என்று ஏசிடும்..
மரியாதை தெரிந்த உலகம்!
தீமைக்கும்
தலைமை நீ வகித்தால்...
தலையிலும் தூக்கி
வைக்கும்...
தரையிலும் போட்டு
மிதிக்கும்...
தறுதலை உலகம்!
ஒரே வீட்டில் கூட்டாக
குடியிருந்தாலும்..
தன்னந்தனியே
மனிதரோடு
மனங்களும்
பிரிந்து வாழும்...
நவநாகரீக உலகம்!
உன் சோகக்கதை கேட்க
நேரமில்லை...
தன்
சொந்த கதை கேளாமல்
நீ போனால்....
உறவுகள் ஒரு பிழை..
என பழித்திடும்
கலியுலகம்!!!
மனம் கூவிடும்
ஒரு வார்த்தை...
நிம்மதியாய்
உறங்கிட தேவை...
நிரந்தரமாய்...
என் அன்னை ஈற்றெடுத்த
அந்த கருவறை உலகம்!
.jpg)


.jpg)
.jpg)

பல உண்மை வரிகள்... முடிவில் அப்படித்தான் நினைக்கத் தோன்றும் வரிகள் அருமை...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
நன்றி :)
Delete