கனவு கண்டேன்
ஆனால்-
காணாமல் போனது
கனவுகள் கண்ணோடு..
என் காலம் போனது
உன்னோடு!!
இதயம் தொலைத்தேன்
தோழி உன்னிடம்!
வாழ்வே
நீ அருகிலிருந்ததால்..
வாழ்க்கை வழிகள்
தெரியவில்லை..
இன்று வலிகள் மட்டுமே
நெஞ்சில்!!
காலம் ஆற்றிடும் காயங்கள்
என நம்பி
நாட்கள் நகர்க்கிறேன்
ஆனால்-
நாட்கள் மட்டும்
நகர்வதுதான் மிச்சம்!!
விதிப்படி சந்திப்பொன்று
வாய்த்திடும் என்று எண்ணி
காத்திருக்கவில்லை..
அந்த தண்டனையில்
எனக்கு விருப்பமில்லை..
நாம் குற்றவாளிகள் இல்லை!!
அது மரணத்தைவிட
மோசமானது என்று..
வெகு தூரம் தள்ளி நிற்கிறேன்!!
உன் வருகையினை
பதிவு செய்யும்
அந்த நேரங்களில் எல்லாம்
இனி-
நான் விடுப்பில் இருக்கிறேன்!!!
.jpg)

.jpg)
.jpg)

வரிகள் - வலிகள்...
ReplyDelete/// நாம் குற்றவாளிகள் இல்லை!! ///