பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Jul 1, 2013

கவசம்

ஒரு கோல் பிடித்து
எழுதும் எழுத்தின் ஒவ்வொன்றிலும்
வெறும் வார்த்தைகளாய்
தமிழ் சாகின்றது!!

பழையன நூலிதழ்களிலும்
புதியன ஊடகங்களிலும்
தேடி பிடித்து வாசிக்கையில்..
அதுவே-
தமிழனுக்கு வாழ்க்கையாகின்றது!!
அங்கெல்லாம்-
தமிழ் வாழ்கின்றது!!!


தமிழது...
தமிழனின் மனதில்...
கோவில் கோபுரம் தாங்கும் கலசம்!!!

அந்த தமிழை
அவன் சுவையோடு வாசித்து...
தன் உயிரோடு சுவாசித்து...
நல்நெறியில் எடுத்துக்காட்டாய் 
உலகில் வாழ்வதே 
தமிழைக் காக்கும் கவசம்!!!

2 comments:

  1. /// தமிழது... மனதில் தாங்கும் கலசம்... ///

    அருமை... உண்மை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete