பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Dec 30, 2011

விடைகொடு.. புத்தாண்டே!!!

விடைகொடு ஆண்டே...
விடை கொடு!
உயிர்தெழு..
புத்தாண்டே..
உயிர்தெழு!

தீமைக்கும்..
சோம்பலுக்கும்..
ஓய்வுகொடு!
நன்மைக்கும்..
உண்மைக்கும்...
உயிர்கொடு!

இருண்ட
இதயங்களுக்கு..
வெளிச்சம் கொடு!
கண்கள் காணும்..
கனவுகளுக்கு..
நல்ல வர்ணம் கொடு!

உள்ளுவதெல்லாம்..
உயர்வுள்ளல் என்ற..
எண்ணம் கொடு!
இளைஞனுக்கு..
நல்ல இலக்கை கொடு!
இயலாதவனுக்கு..
இருப்பவன் பங்கை கொடு!

அழும் குழந்தைக்கு..
அலுவலில் மட்டும்
மூழ்கியிருக்கும்...
அன்னை தந்தை..
அன்பும் கொடு!
சொந்தங்களுக்கு...
அன்பொன்றே...
சொந்தம் என்ற...
எண்ணம் கொடு!
பிறர் மனை..
நோக்கவேண்டாம் என்ற..
பிடிவாதம் கொடு!

பெண்ணின் நட்பிற்கும்..
ஆணின் காதலுக்கும்..
தெளிவு கொடு!

சாதிகள் இல்லையடி என..
பயில்விக்கும்..
கல்விக்கூடங்களில்..
சாதிசான்றிதழ்களுக்கு..
தடை கொடு!

ஏற்றங்களுக்கு..
ஏணி கொடு..
ஏமாற்றங்களுக்கு..
மாற்றம் கொடு!

கொலைவெறி இல்லாத..
நல்ல புதுபாடல்கள் கொடு!
கொள்கை உள்ள...
நல்ல வீரம் கொடு!

முல்லை விவகாரங்களுக்கு..
விடைகொடு!
அந்நிய முதலீடிற்கு..
சவுக்கடி கொடு!
என் அன்னைபூமிக்கு...
ஒரு சந்தர்ப்பம் கொடு!

விடைகொடு..
புத்தாண்டே..
விடைகொடு!!!

No comments:

Post a Comment