சென்னை..
மும்பை..
டெல்லி..
அடிச்சேன் செஞ்சுரி..
சொல்லி!!!
வாசிமோ..
வார்னேவோ..
நான் ஒரு..
வார்னிங்!!!
நிடினி முதல்...
சிட்னி வரை..
ஒவ்வொரு பௌலரும்..
என்னிடம் சட்னி..
எதிரணி கேப்டன்..
என்னால் பட்னி!!
ஆஸ்திரேலியா!
தெறிக்கும்..
தென்னாப்ரிக்கா!
இலக்கை தொலைக்கும்..
இலங்கை!
ஒவ்வொரு முறையும்..
என்னிடம் பஞ்சர் ஆகும்..
பாகிஸ்தான்!
காணாமல் போகும்..
கென்யா!
வருந்தும்..
மெருகிழக்கும்..
மேற்கிந்தியத்தீவு!
இவை அனைத்தோடு..
இங்கிலாந்தும்..
நியுசிலாந்தும்..
லேன்ட் ஆகும்..
என் ஆட்டம் கண்டு!!
ஆடிய மேட்ச்
முதல் ஆளாய்..
அடிச்சேன்..
இருநூறு!
பலமுறை அவுட்..
தொண்ணூறு!
தகராறு!
வரும்போது..
வரும்..
நூறாவது நூறு!!!








No comments:
Post a Comment