பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Jan 10, 2012

கதை பாடியிருப்பாயோ???

ஒரு காட்சிப்பிழையானாய்..
காதலா..
மனசாட்சி
பிழையானதடா...
நம் காதல்!

என் வெட்கங்களை..
விழி இமைக்காமல்..
தின்றாயே காதலா..
இன்று வழி மறித்தும்..
நீ விலகி செல்வது ஏனோ?

என் மௌனங்களை..
பேச வைத்த காதலா..
இன்று நீ...
ஊமையானது ஏனோ?

காரணமின்றி முளைத்த..
காதலுக்கு கண்ணில்லை...
இது-
தரணி அறிந்தது காதலா!

இன்று உன் கண்களுக்கு..
என்னை விட..
புதியதாய் முளைத்தது..
என்னென்ன காதலா??
சாகாத சாதி தெரிந்ததா?
பைசா பெறாத 
பணம் தெரிந்ததா?
இல்லை...
அன்னை கண்ட...
அன்னக்கொடி தெரிந்தாளா?
என்னை மட்டும்..
குருடாக்கி..
தொலைப்பது..
எந்த ஊர் நியாயம் காதலா?

உனக்கென்று..
ஒரு மதி..
எழுதியிருந்தால்..
எனக்கென்று ஒரு..
நல்விதி..
சொல்லாமலா..
போயிருப்பான் இறைவன்??

மன்னித்துவிடு..
கோழைக்காதலா...
விட்டில் பூச்சி..
விளையாட்டிற்கு....
வெளிச்சங்களை..
விலை கொடுக்க..
நான் ஒன்றும்
தெருவிளக்கு இல்லை!

அக்கினி சுடரொன்று
கண்டு..
நல்லது..தீயது..
யாம் அறியோம்...
என்று புதுமை பாடிய..
பாரதி மண்ணில் வாழும்..
அகல் விளக்கு! 

எனக்கு இப்படியொரு..
கதை பாடியிருப்பாயோ காதலி..
நீ எனை பிரியாமல்..
நான் உனை பிரிந்திருந்தால்???

2 comments: