கண்ணில் விழுந்தால்..
தூக்கிடும் ஆளை!!
மேட்டிலும் குழியிலும்..
தொடரும்..
எங்கள் பயணம்..
மதுரைக்குள் பயணம்!!
சமர்த்து..
பெண் சேலையை பார்த்தால்..
விபத்து!!!
ஒவ்வொரு கணமும்..
கவனம்..
உயிர் பரிசாக அமையும்...
வீட்டுக்கு..
கரை சேரும் வரையும்!!!
சிக்னலை சீண்டாத ஆட்கள்...
குறுக்கே நடக்கும்போது...
சில நேரம்..
சிரிப்பு வரும்..
பல நேரம்...
சினமும் வரும்!!!
நடைபாதை உள்ளபோதும்..
சாலையில்
நடந்திடும் போது..
எரிச்சல் வரும்..
ஒன்று தோன்றும்..
இவருக்கு வெளிச்சம்..
என்று வரும்???
சைகையின்றி...
வளைவதும்..
தேவையின்றி..
ஒலிப்பதும்..
தினந்தோறும்..
வாடிக்கை..
விபத்தில் முடிந்தால்..
வேடிக்கை!!
தவறென்று தெரிந்தபின்னாலும்..
ஒருவழி..
விதிகளை யாரும்...
மதிப்பதில்லை..
விதியும் யாரையும்..
விடுவதில்லை!!!
தேவை மனங்களில்...
சுயஒழுக்கம்..
அது இல்லை..
என்பதே என் வருத்தம்!!!




No comments:
Post a Comment