பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

Jun 8, 2011

மனம் சொல்லும் நியாயங்கள்

சமூகத்தை நீ..
காப்பாற்றுவதில்லை..
சமூகமும் உன்னை..
காப்பாற்றபோவதில்லை!!


எவரிடமும்
குற்றமில்லை..
என்றானபின்..
காலத்தை..
இடம் சுட்டி..
பொருள் விளக்கம்..
கேட்கும் உலகமிது!

நால்வரின்..
ஏச்சுபேச்சுக்கு..
செவி கொடுக்கும்..
மனிதன்...
தன் மனம்..
சொல்லும் வழியை...
புரிந்தும்..
தவிர்ப்பது ஏனோ??
நீ வாழும்..
ஒரு வாழ்க்கை..
சமூக
த்திற்கில்லை..
உன்-
சுயநலத்திற்கு
மட்டுமே!!
பிறகு
சமூகம்..
தன்னை ஏற்குமோ
என்ற..
தயக்கம் ஏனோ??

மதிகெட்ட மானிடா!
மனம் சொல்லும்..
நியாயங்கள் மட்டும்..
கேளடா!

3 comments: