விடை தெரியாவிடினும்..
தாளை பூர்த்தி செய்வது..
மாணவனின் வீரம்!
இருவரில் யார் தோற்றாலும்..
விட்டுக்கொடுத்துவிட்டு..
மடிந்து வாழ்வது..
காதலின் வீரம்!
இம்மையில்கூட..
உயிர் காக்கும்..
நட்பும் வீரம்!
உயிரினும் மேலான..
கற்ப்பிழந்தால்..
தன்னையே மாய்த்திடும்..
கன்னியின் வீரம்!
கரை சேராவிட்டாலும்..
விழுந்தபின்னும்..
ஓயாமல் கம்பீரமாய்..
எழுவது...
கடலலையின் வீரம்!
பயத்தில் மட்டுமே..
புலியாய் பாய்வது..
பூனையின் வீரம்!
வாக்குறுதிகளை..
போலியாய் அள்ளிவீசுவது..
வேட்ப்பாளனின் வீரம்!
அதையே எண்ணி..
மனம் லயிக்காமல்..
பணம் வாங்கி..
ஓட்டில் வேட்டு வைப்பது..
வாக்காளனின் வீரம்!
ஒரு கல்..
சுக்குநூறாய்..
தன்னை உடைத்தாலும்..
எதிராளியின் பிம்பம்
காட்டுவது..
ஒரு கண்ணாடியின் வீரம்!
கடிகாரத்தின்
முட்கள் நின்றாலும்..
நில்லாமல் ஓடுவது..
காலத்தின் வீரம்!
ஆறாத வடுவாக..
உன்னை நினைவுபடுத்துவது...
காயத்தின் வீரம்!
பேனாவில் மை ஊற்றி..
கற்பனைகளுக்கு..
எழுத்தின் வடிவில்..
பொய் சூட்டி..
பெண்ணை அழகி என்று..
தைரியமாக கவிதை
புனைவது..
கவிஞனின் வீரம்!
பதுங்கி மறைவதிலும்..
பிறகு தாக்குவதிலும்..
உண்டு..
பாம்பின் வீரம்!
உயிர் வாழ்வதில்
மட்டும் அல்ல..
மண்ணில் தலை
சாய்வதிலும் உண்டு..
போர்வீரனின் வீரம்!
பிறருக்காக..
பயனுற வாழும் வாழ்வே..
மனித வாழ்வின் வீரம்!!!

No comments:
Post a Comment