பேனாவின் மை குடித்து என் எழுத்துக்கள் இங்கே மடிந்துவிட்டன! உங்கள் இதயம் படித்து மீண்டும் உயிர் பெற செய்யும் இந்த முயற்சிக்கு கிறுக்கனின் இதயம் கனிந்த நன்றி!

May 31, 2011

இளைஞன் டுடே..


பயணச்சீட்டு
தேவையில்லை...
படிக்கட்டில்
தொடங்குவோம்
எங்கள் பயணத்தை..
மரண சீட்டெடுத்து!!

பாகற்காய் தான்
படிப்பு..
என்றாலும்..
அரைகுறையாய்...
விழுங்கி..
விழுக்காடு பெறுவோம்!
விளைவு..
நாங்கள் 
புரியும் வேலையில்..
அறிவு
பைசா பெறாது!!!

விளையாட்டாக
வென்றால்..
வானமே
வியக்கும் வர்ணம்..
வெடிப்போம்.. 
எங்கள் மகிழ்ச்சியை!!
ஆனால்-
போராளியை..
சமாளித்த...
செய்தி அறிந்தால்..
வெறும் கைதட்டி..
நீத்த உயிருக்கு..
இரு நிமிடம்..
அசராமல்நின்று..
அஞ்சலி அழ..
நேரம் இல்லை...
எங்கள்..
கலிகால ஏட்டில்!!!

காதல்-
எங்களுக்கு..
இன்றொன்று
போகும்..
நாளை..
மற்றொன்று
வரும்!
கோடையில்..
உதிரும் இலைகள் போல்!
நம்பிக்கை 
விதைப்போம்
என்றென்றும்!!
வசந்தகாலங்கள்..
வாழ்வில் உண்டென்று!!

நாங்கள் என்ன
செய்ய??
குடும்பக்கூடு..
கற்றுகொடுப்பது...
என்ன??
இதோ-
எங்கள்
பெற்றோருக்கு..
பெருமைக்கே..
நாங்கள்!!
சமூகத்தில்..
இவன் தான்..
சம்பாதிக்கும்
ஆண்பிள்ளை...
மாப்பிள்ளை..
என்று 
மார்தட்டிக்கொள்ள!! 

சோறு கண்ட இடம்..
சொர்க்கம்..
சுவர் கண்ட இடம்..
சிறுநீர்!!
இடம்..
பொருள்..
ஏவளின்றி..
எந்நேரமின்றி..
பீச்சும்..
எச்சில்!!
சாலை விதிகள்
மதிக்காத..
மரணமே..
எங்களுக்கு
மாவீரம்!!

புகை..
எமக்கு..
பகை!!
ஆனால்-
அதெல்லாம்..
மிகையாகாது!!
நாடும்..
வீடும்..
பெரும் கேடு..
மது அருந்துவதை...
கேள்வி கேட்க்கையில்!

இவை அனைத்தும்
மீறி..
புறம் பேசு..
சாதி..
சமணம்..
காமவெறி..
என..
மனக்காட்டில்..
எத்தனை..
கொடிய மிருகங்கள்??

தனிமனித ஒழுக்கம்..
இதன் விலை??
எங்கள்..
மக்கள்தொகையை...
தாங்கும்...
பூமித்தாயின் எடை..
விடை வராது!!

எங்களுக்கு...
பணம் இல்லை..
பயம் இல்லை..
நீதி இல்லை..
நியாயம் இல்லை...
ஜனனம் இல்லை..
ஆனால்.. 
புழுங்கியே...
புழு போல்
மடிவோம்..
எங்கள் தேசத்து...
அவலங்களை...
கலையமுடியாமல்..
களவானியாய்..
காட்சிபுரிகையில்!!

எங்களுக்கும்...
இந்த மண்மேல்..
அக்கறை உண்டு..
கவலை உண்டு...
கடமை உண்டு..
காதல் உண்டு!!
வெள்ளித்திரையில்..
நாயகனின்..
வீராவேச ..
வீராவேஷ..
வசனம் முடியும்வரை!

வாக்கில்..
நாங்கள் இடுவது..
நம்பிக்கை வித்து!!
வேட்பாளன்..
வாக்கில்..
நாங்கள் காண்பது..
வெறும்..
புரளி வித்து!!
குறைகளை..
நாங்கள்
தட்டிகேட்கும் முன்..
இங்கு
நிறைந்து விடும்..
சில
கல்லறை தோட்டங்கள்!

ஆனாலும்..
எங்களுக்குள் 
உண்டு..
தேசப்பற்று!!
ஒரு 
கள்ளகாதல் போல்...
இல்லாதவர்க்கும்..
இயலாதவர்க்கும்..
நன்மைகளை..
மறைவாக...
முகவரியின்றியே..
தொடர்கின்றோம்..
நல்லவை
வெளிச்சத்திற்கு..
நன்மைகள்
வரும்போது...
அது-
வியாபாரமாகி..
பூ சூட்டி..
பொட்டு வைத்து..
விபச்சாரமாய்..
எவருக்கோ..
முந்தி விரிக்கிறது!!

5 comments: